திருகோணமலை - அனுராதபுர சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியை திருடிய சந்தேக நபரை இன்று செவ்வாய்க்கிழமை காலை கைது

திருகோணமலை - அனுராதபுர சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
லொறியில் திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியை திருடிய சந்தேக நபரை இன்று செவ்வாய்க்கிழமை காலை கைது செய்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 20ஆம் திகதி அனுராதபுர சந்தியில் மொரவெவ பொலிஸ் பிரிவுக்குடபட்ட தெவனிபியவர பகுதியைச் சேர்ந்த நபரொருவரின் நிறுத்திவைக்கப்பட்ட லொறியில் கையடக்கத் தொலைபேசி திருடப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இம் முறைப்பாட்டினை அடுத்து லொறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீதிக்கு முன்னாள் உள்ள கடையின் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இருந்ததாகவும் அதன் காட்சி பெறப்பட்டு குறித்த பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில் சந்தேக நபரை இன்று கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இராணுவ புலனாய்வுத் துறையினர் வழங்கிய தகவலையடுத்து ரொட்டவெவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திலீப் சாமிந்த குறித்த சந்தேக நபரை திருடிய கையடக்க தொலைபேசியுடன் கைது செய்ததாகவும் தெரியவருகின்றது.
குறித்த சந்தேக நபர் 43 வயது ரொட்டவெவ-மிரிஸ்வெவ பகுதியைச் சேர்ந்த எம்.எச் அஜ்மீர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இவர் தொடர்பில் ஏற்கனவே திருட்டு மற்றும் திருடிய பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பல வழக்குகள் திருகோணமலை நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது