Header Ads

Breaking News
recent

துப்பாக்கி தோட்டாக்கள் அடங்கிய பொதி மீட்பு : ஒருவர் கைது...


(பாறுக் ஷிஹான்)
வீடொன்றிலிருந்து 15 துப்பாக்கி தோட்டாக்கள் அடங்கிய பொதியொன்றினை கல்முனை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை 5ம் கிராம சேவகர் பிரிவு அல்-ஹம்றா வீதியிலுள்ள வீடொன்றின் கூரையில் எம்-16 துப்பாக்கிக்கு பயன்படுத்தும் தோட்டாக்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்ட வீட்டுரிமையாளர் தற்போது கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இன்று (7) மதியம் கல்முனை பொலிஸ் விசேட பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இச்சுற்றிவளைப்பு இடம்பெற்றதுடன், அவ்வீட்டிலிருந்து 54 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரும் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Powered by Blogger.