(Update) XPress Pearl கப்பல்- மேலும் 7 பேர் இலங்கையில் கைது!

தற்போது கைது செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இலங்கை முகவர் நிறுவன உறுப்பினர்கள் 7 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எக்ஸ் – பிரஸ் பேர்ள் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவன உறுப்பினர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.