Header Ads

Breaking News
recent

திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலக பிரிவுகளில் சவ்பாக்கிய உற்பத்தி கிராமங்கள் திட்டத்தின் கீழ் வேலைத்திட்டங்கள் ஆரம்பம் : சமன் தர்ஷனா படிக்கோரல...



திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலக பிரிவுகளில் சவ்பாக்கிய உற்பத்தி கிராமங்கள் திட்டத்தின் கீழ் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான சமன் தர்ஷனா படிக்கோரல தெரிவித்துள்ளார்
இன்று (17) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இவ் வேலை திட்டத்தின் முக்கிய நோக்கம், குறைந்த வருமானம் பெரும் குடும்பங்கள், ஏற்கனவே சம்பந்தப்பட்ட உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் , வாய்ப்பு மற்றும் ஆதரவை வழங்குவதன் மூலம் ஒரு புதிய தயாரிப்பை உருவாக்க விரும்புவோரின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாகும் என தெரிவித்த திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான சமன் தர்ஷனா படிக்கோரல இத்திட்டமானது கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

எனவே இதற்காக கிட்டத்தட்ட ரூ .86 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சில பிரதேச செயலகங்களுக்கு பயனாளிக் குடும்பங்களுக்குத் தேவையான அடிப்படைப் பயிற்சி, இயந்திரங்கள் போன்றவை வழங்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான சமன் தர்ஷனா படிக்கோரல,மேலும் குறிப்பிட்டார்.

இந்த திட்டம் வெற்றிகரமாக இயங்கும் போது, இந்த திட்டத்தின் கீழ் பல திட்டங்கள் பொதுமக்களுக்கு கிடைக்க தயாராக உள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான சமன் தர்ஷனா படிக்கோரல தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.