Header Ads

Breaking News
recent

கடத்தி வரப்பட்ட 1,157 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது...





பூநகரி பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 1,157 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று பூநகரி, மன்னித்தலை பகுதியில் பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட மஞ்சள் பொதியுடன் இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் மன்னார் மற்றும் நீர்கொழும்பு பகுதிகளை சேர்ந்த இருவரே இவ்வாறு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், விசாரணைகளின் முடிவில் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Powered by Blogger.