கொவிட்-19 ஜனாஷா நலன்புரிச் சங்கத்திற்கு 2இலட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் ஜனாஷா பெட்டிகளும் வழங்கி வைப்பு...
(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்) திருகோணமலை புல்மோட்டை கொவிட்-19 ஜனாஷா நலன்புரிச் சங்கத்திற்கு ரொக்கப் பணமும் ஜனாஷா பெட்டிகளும் வழங்கி வைக்கப்பட்டது
இந்நிகழ்வு நேற்று (17) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது
இலங்கை நாட்டை மட்டுமல்ல முழு உலகையே பேர் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள கொவிட்-19 ஐ புல்மோட்டையிலிருந்து முற்றாக இல்லாதொழிக்கும் நோக்கிலும் கோவிட் 19 தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாஷாக்களை உறவினர்களின் பங்களிப்புடன் உரியமுறையில் நல்லடக்கம் செய்வதற்கு
பல்வேறுபட்ட சவால்கள் காணப்படும் நிலையில்
இவ் சவாலினை வெற்றிகரமாக செயற்பட்டுவரும் புல்மோட்டை கொவிட்-19 ஜனாஷா நலன்புரிச் சங்கத்திற்கு தன்னார்வ தொண்டு அமைப்பான AL-Miftha வுடன் இணைந்து ஆதம்பாவா பைஷர் அவர்களின் ஏற்பாட்டில் திருகோணமலை புல்மோட்டை கொவிட்-19 ஜனாஷா நலன்புரிச் சங்கத்திற்கு 2இலட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் நான்கு ஜனாஷா பெட்டிகளும் வழங்கி வைக்கப்பட்டது
மேலும் நிகழ்வின் கொவிட்டினால் மரணிக்கும் வறிய ஜனாஷாக்களை கொண்டு செல்வதற்காக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன்.
இந்நிகழவில் தன்னார்வ தொண்டு அமைப்பான AL-Miftha அமைப்பின் உறுப்பினர்கள்,ஆதம்பாவா பைஷர் மற்றும் முன்னாள் குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா தௌபீக் மற்றும் புல்மோட்டை கொவிட்-19 ஜனாஷா நலன்புரிச் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

