Header Ads

Breaking News
recent

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 149 தொற்றாளர்கள் - 06 மரணங்கள் பதிவு...


(ரவ்பீக் பாயிஸ்)
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 149 கொரோனா தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாகவும்,ஆறு மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் இன்று (20) வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 29 பேரும்,
திருகோணமலை சுகாதார வைத்திய பிரிவில் 26 தொற்றாளர்களும், மூதூர் சுகாதார வைத்திய அதிகார பிரிவிற்குட்பட்ட பகுதியில் 22 பேரும் இங்கணப்பட்டுள்ளதாகவும்.

மேலும் குச்சவெளியில் 21 நோயாளர்களும், தம்பலகாமத்தில் 15 நோயாளர்களும்,கோமரங்கடவல சுகாதார வைத்திய பிரிவில் 11 பேரும், கந்தளாய் பிரதேசத்தில் 11 நோயாளர்களும் இனங்காக்கணப்பட்டுள்ளதுடன்.

அதேபோல் பதவிசிறிபுர பகுதியில் 08 பேரும்,கிண்ணியாவில் ஐவரும்,குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய பிரிவில்
ஒருவரும் இனங் காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

இதில் 80 ஆண்களும், 69பெண்கள் அடங்கலாக
மொத்தம் 149 புதிய தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் திருகோணமலையில் 04 பேரும்,சேருவில பிரதேசத்தில் ஒருவரும்,மூதூரில் ஒருவரும் என 6 மொத்தம் மரணங்களும் பதிவாகியுள்ளது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Powered by Blogger.