Header Ads

Breaking News
recent

குச்சவெளி பிரதேச சபை வளாகத்தில் இலங்கை வங்கியின் ATM-CTM இயந்திரம் பொருத்துவதற்க்கான ஒப்பந்தம் கைச்சாத்து...



(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
திருகோணமலை - குச்சவெளி பிரதேசத்தில் நீண்ட காலமாக பெரிதும் தேவைப்பாடாக இருந்த இலங்கை வங்கியின் ATM நிலையம் அமைக்க அனைத்து வேலைகளையும் ஆரம்பிக்க பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (17) குச்சவெளி பிரதேச செயலகத்தில் இதற்க்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் திருகோணமலை - குச்சவெளி பிரதேசத்தில் நீண்ட காலமாக பெரிதும் தேவைப்பாடாக இருந்த இலங்கை வங்கியின் ATM நிலையம் அமைக்க குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஜனாப் ஏ.முபாறக் அவர்களின் முயற்சியால் சபையின் தீர்மானத்திற்கு ஏற்ப 10 ஆண்டுகளுக்கு மாத்திரம் என்ற காலபகுதியை கொண்டு குச்சவெளி பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் இலங்கை வங்கியின் உதவி பொது முகாமையாளர் திரு.வணிக சேகர் மற்றும் வங்கியின் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இதன்போது தவிசாளர் கட்டிடத்தின் ஆரம்ப கட்ட வேலைகளை இலங்கை வங்கியின் உத்தியோகத்தர்கள் சகிதம் பார்வையிட்டதுடன் இலங்கை வங்கியின் ATM நிலையம் என்பது இப்பகுதிக்கு தேவையான திட்டம் என்றும் நாட்டில் ஏற்ப்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் இவ் கொடிய கொரோனா (COVID19) காலப்பகுதியான இக்காலத்தில் இவ் வேலை திட்டத்தினை மிக விரைவாகவும் சிறப்பாகவும் செய்து முடிக்குமாறு உரிய வங்கி அதிகாரிகளிடம் இலங்கை வங்கியின் உதவி பொது முகாமையாளர் திரு.வணிக சேகர் எடுத்து கூறியதுடன்.

அதற்கமைய ஒருமாத காலத்துக்குள் இவ் வேலை திட்டத்தினை முடித்து தருவதாகவும் குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஜனாப் ஏ.முபாறக் அவர்களுக்கு உரிய அதிகாரிகளினால் வாக்குறுதியாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Powered by Blogger.