Header Ads

Breaking News
recent

பசளை இறக்குமதி தடை : விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாக கூறிய நட்ட ஈடு இதுவரை கிடைக்கவில்லை திருகோணமலை குச்சவெளி விவசாயிகள் குற்றச்சாற்று...

(ரவ்பீக் பாயிஸ்)
நாட்டில் இரசாயன பசளை இறக்குமதி தடை செய்யப்பட்டதை அடுத்து போதிய அளவு சேதனப் பசளைகள் இல்லாமல் விவசாயிகள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனடிப்படையில் திருகோணமலை குச்சவெளி கும்புறுபிட்டி பிரதேச விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட விவசாய பயிர்களில் உரிய அறுவடை இல்லாமையினால் பெரும் நாட்டத்தை அடைந்துள்ளதாக எமக்கு தெரிவித்தனர்.

அதனடிப்படையில் அப்பிரதேச விவசாயி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்...

எமது விவசாய நிலங்கள் ஆண்டாண்டு காலமாக இரசாயன பசளைக்கு பழக்கபட்டுள்ள நிலையில் நாட்டில் ஒரே தடவையில் இதுவரை இறக்குமதியை தடை செய்திருப்பது விவசாயி ஆகிய எமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்

மேலும் இரசாயன பசளை தடையானது வளர்ந்து வரும் எமது சந்ததியினருக்கு பெரும் முக்கியமான ஒன்றாக இருப்பது போன்று விவசாயத்தில் ஒரே தடவையில் விவசாய நிலத்தை சேதனப் பசளைக்கு மாற்றுவது என்பது மிகவும் சிரமமானது என்று தெரிவித்த விவசாயி

இதனடிப்படையில் எமது விவசாய நிலமானது கடந்த 18 வருடங்களுக்கு மேலாக நல்ல விளைச்சலை அடையக் கூடியதாக இருந்தது எனது தோட்டத்தில் சுமார் 15 குடும்பங்களுக்கு மேற்பட்டவர்கள் தமது வாழ்வாதார தொழிலாக விவசாயத்தை நம்பியே இருக்கின்றனர் இந்த வருடம் இதுவரை காலத்தில் நான் ஒருமுறையேனும் ஒரு சிறிய விளைச்சலை கூட அறுவடை செய்யவில்லை என விவசயி கவலை தெரிவித்தார்

மேலும் இவ்வாறு தொடர்ச்சியாக இந்த இவ் பசளை தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் விவசாயத்தை விட்டு வேறு தொழில் ஒன்றை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளோம் எனவே உரிய அதிகாரிகளுக்கும் நாட்டின் ஜனாதிபதி அவர்களுக்கும் விவசாய மக்கள் சார்பில் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது ஒரே தடவையில் இவ் இரசாயன பசளையினை தடை செய்யாமல் இரசாயன பசலை உடன் சேதனப் பசளையும் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக எமது நிலத்தினை பதப்படுத்தி எமது குச்சவெளி கும்புபுறுப்பிட்டி பிரதேசத்தில் வெகு சீக்கிரத்தில் இரசாயன பசளை அற்ற விவசாயத்தை முன்னெடுத்து செல்வோம் என்பதனை உறுதியாக தெரிவிப்பதாக சுட்டிக்காட்டினார்

மேலும் இதுவரை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதை போன்று நஷ்டம் அடையும் விவசாயிகளுக்கு எவ்வித நஷ்ட ஈடும் வழங்கப்பட்டதாகவும் உரிய பசளைகள் எமக்கு கிடைக்கப் பெற்றதாகவும் நாம் அறியவில்லை எனவே உரிய அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு எமது பிரதேசத்தில் விவசாயத்தை மென்மேலும் முன்னோக்கி செல்வதற்கு உதவி வழங்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று திருகோணமலை குச்சவெளி பிரதேச உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர.






Powered by Blogger.