Header Ads

Breaking News
recent

கிழக்கில் கோவிட் நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்துகள் விநியோகம்!!!

(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
கிழக்கு மாகாணத்தில் கோவிட் - 19 கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்துகள் விநியோகிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் வழிகாட்டுதலின் கீழ் நேற்று (30) திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

இந்த மருந்துகள் விநியோகத்தின் ஆரம்பக்கட்டமாக நேற்று திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் மற்றும் கோமரன்கடவல பிரதேச செயலகங்களில் கோவிட் - 19 கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Powered by Blogger.