சாகல பள்ளி வாசல்களை தற்காலிகமாக மூட தீர்மானம்...

(ஹொரவ்பொத்தான - நசீம்)
பிரதேசத்தின் தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு சுகாதார பிரிவின் அறிவுறுத்தலுக்கமைய ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் உள்ள சகல பள்ளிவாசல்களும் இன்று(09) மாலை 4 மணி முதல் எதிர்வரும் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஹொரவ்பொத்தான கிளை, ஹொரவ்பொத்தான பெரிய பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன கூட்டாக இணைந்து அறிவித்துள்ளது.