Header Ads

Breaking News
recent

திருமலையில் யானை தாக்கி வயோதிபர் மரணம்...

(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிப்பாஞ்சான் குளத்துக்கு மேல் உள்ள காட்டுப்பகுதியில் யானையின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் சடலமொன்று இன்று (09) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நான்கு பிள்ளைகளின் தந்தையான கந்தளாய்- வென்ராசன்புர பகுதியைச் சேர்ந்த ரத்னாயக்க

முதியன்சலாகே சந்தன பிரேமகாந் (56வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காட்டு பகுதிக்கு இன்று காலை சென்றபோது காட்டு யானை தாக்கியதாகவும் அவருடன் சென்றவர் பயம் காரணமாக ஓடி உள்ளதாகவும் தெரிய வருகின்றது.

குறித்த சம்பவ இடத்திற்கு திருகோணமலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம்.றூமி சென்று பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டார்

குறித்த மரணம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




Powered by Blogger.