Header Ads

Breaking News
recent

திருமலையில் 01 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது...

(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருகன் கோயில் வீதியில் கஞ்சா போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (23) இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேக நபரை சோதனையிட்டபோது அவரிடமிருந்து பொதி செய்யப்பட்ட நிலையில் 01 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும், இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
Powered by Blogger.