Header Ads

Breaking News
recent

திருமலையில் வரிசையில் காத்திருந்த மக்கள் : ஒருவருக்கு 1Kg சீனி வழங்கும் சதோச நிறுவனம்...


(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
நாட்டில் சீனிக்கு தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் நேற்று முதல் லங்கா சதோச நிறுவனத்தின் ஊடாக 1kg சீனி 130 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய முடியும் என வார்த்தை அமைச்சு அறிவித்திருந்தது.

இருப்பினும் திருகோணமலையில் சீனி கொள்வனவிற்காக லங்கா சதோச நிறுவனத்தில் மக்கள் வரிசையில் காத்திருந்து சீனி கொள்வனவு செய்தாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று 01ஆம் திகதி திருகோணமலை ஏகாம்பரம் வீதியில் அமைந்துள்ள லங்கா சதோச நிறுவனத்தில் சீனி கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை எம்மால் அவதானிக்க முடிந்தது.


மேலும் அரசாங்கத்தினால் சீனிக்கு தட்டுப்பாடு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் நேற்றைய தினம் முதல் லங்கா சதோச நிறுவனத்தினூடாக ரூபா 130 க்கு சிவப்பு சீனி கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் இவ்வாறு நீண்ட நேரம் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து ஒருவருக்கு 1kg சீனி மாத்திரமே வழங்கப்படுவதாகவும் வழங்கப்படும் சீனி இரு நாட்களுக்கும் போதாமல் இருப்பதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வரிசையில் நின்று ஒருவருக்கு 1kg சீனி மாத்திரம் வழங்குவது மக்களை பெரும் அசௌகரியங்களுக்குள்ளாக்குவதாக வாடிக்கையாளள் தெரிவிக்கின்றனர்.

Powered by Blogger.