ஊரடங்கு அமுலில் : விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட ஒரு ஆண் கைது...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இணையத்தின் ஊடாக விளம்பரப்படுத்தி பாலியல் தொழிலை முன்னெடுத்து வந்த இடமொன்று காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
கொட்டாவ பகுதியில் உள்ள வாரச்சந்தைக்கு அருகில் உள்ள இரண்டு மாடி கட்டடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 பெண்கள் மற்றும் அங்கிருந்த ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
கொட்டாவ காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 30 - 37 வயதுக்கு இடைப்பட்ட மத்துகம, பலாங்கொடை, பாதுக்கை, பெலிவுல்ஓயா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.