Header Ads

Breaking News
recent

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதே சபையினால் சடங்கு நிகழ்வுகளுக்கு இலவசமாக பாவனை பொருட்களை வழங்க தீர்மானம்...


திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையினால் பொதுமக்களுக்கான சேவையின் ஒரு அங்கமாக பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேச மக்களின் ஈமச்சடங்கு /இறுதி சடங்கு நிகழ்வுகளுக்கு எவ் வித கட்டணமுமம் இன்றி முற்றிலும் இலவசமாக இரண்டு நாட்களுக்கு பாவனை பொருட்களை வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

அதன்படி உப்புவெளி, வெள்ளமணல் மற்றும் சாம்பல்தீவு உபஅலுவலகங்களூடாக பின்வரும் பாவனை பொருட்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

இரண்டு தற்காலிக கூடாரங்கள்,50 பிலாஸ்ரிக் கதிரைகள், இரண்டு LED மின் விளக்குகள்,மற்றும் 3000 லீட்டர் தண்ணீர் பவுசர் ஒன்றும் இரண்டு நாட்களுக்கு இலவசமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை தெரிவித்துள்ளது

மேலும் பொதுமக்களுக்கான சேவையின் ஒரு அங்கமாக இவ் நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இச்சேவைகளை இலவசமாக பெற அப்பிரதேசத்தின் வட்டார பிரதேச சபை உறுப்பினர்களூடாக விண்ணப்பத்தை சமர்ப்பித்து இச்சேவையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Powered by Blogger.