Header Ads

Breaking News
recent

சீமெந்து விலை நேர்மையற்ற வியாபாரிகள்


இந்த கொரோணா காலத்தில் ஒரு சில சீமெந்து வியாபாரிகள் பணத்தாசை கொண்டு மனச்சாட்சியே இல்லாத பொய் பேசி ஏமாற்று வியாபாரம் செய்து வருகின்றனர்.

இன்று சீமெந்து ஒன்றின் விலை 1200 ரூபாவிலிருந்து 1350 ரூபா வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இத்தனைக்கும் சீமெந்தினுடைய விலை எதுவும் இதுவரை எந்தவித அதிகரிப்பும் செய்யப்படவில்லை சீமெந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுபோல் காண்பிக்கப்பட்டு. இந்த பதுக்கல் வியாபாரம் நடக்கிறது. ஆனால் நாளாந்தம் சீமெந்து வந்துகொண்டுதானிருக்கிறது.

இதில் இன்னுமொரு அவலம் காசையும் விலை அதிகமாகக் கொடுத்து அவர்களிடம் கெஞ்சி அலைந்து காலில் விழுந்து சீமெந்து கேட்கும் நிலையும் உருவாகி இருப்பதாக காண முடிகிறது.

ஒரு முள்ளிபொத்தானை வியாபாரியிடம் ஒரு பேக் சீமெந்து கேட்டு ஒருவர் கெஞசிக் கொண்டு நின்ற நிலை இப்போது என் கண் முன்னே வருகிறது.

இதில் எமது மக்களின் தவறு என்னவென்றால் இந்த சூழலில் சீமெந்து இனி கிடைக்காது இந்த சந்தர்ப்பத்தைவிட்டால் நாம் சீமெந்தை பெற்றுக்கொள்ள முடியாது அல்லது சீமெந்தின் விலை இன்னும் அதிகரிக்கும் என்று பயந்து எப்படியாவது சீமெந்தை வாங்கிவிடுவோம் என்று முந்தியடித்து முட்டிமோதித் திரிகின்றார்கள்.

இப்படி வாங்குவதை சிலர் புத்தி சாலித்தனமான வேலை என்றும் தங்களை நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் செய்கின்ற வீட்டு வேலை தங்களுடையதுதான் அதனை நாங்கள் சற்று தாமதித்துச் செய்தாலும் ஒன்றும் குறைந்துவிடப்ப போவதில்லை எல்லா வீட்டு வேலை செய்கின்றவர்களும் சீமெந்தை வாங்குவதற்கு போட்டி போடுவதை விட சீமெந்தை நாங்கள் வாங்காது இருப்போம் என்று ஒவ்வொருவரும் முடிவு எடுத்தால் சீமெந்து மலிவாகி கிடக்கும் வாங்க ஆள் இன்றி வாடிக்கையாளர்களை தாமாக அழைத்துக் கொடுக்கும் நிலை ஏற்படும்.

எப்போதும் தட்டுப்பாடு ஏற்படுகின்ற போது நாங்கள் எல்லோரும் ஒன்றாக ஒரு பொருளை கேட்கின்ற போது அதன் விலை இயல்பாக அதிகரிக்கும்.

நாங்கள் எங்களது தேவையை பிற்படுத்தி வாங்குவதை சற்று பிற்படுத்தி இந்த விடயத்தை தட்டிக்கேட்கும் மக்காளாக எமது மக்கள் மாறாதவரை இந்த அநீதியை இந்த சீமெந்து வியாபார அநியாயத்தை நாம் மாற்ற முடியாது.

இந்த சந்தர்ப்பத்தை அவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி விலை ஏற்றம் பெறாத சீமெந்தை விலை கூட்டி பதுக்கல் வியாபாரம் செய்து கொண்டிருப்பது நீடிக்கும்.

எனவே சீமெந்து விலை அதிகரித்திருப்பதற்கு பாதிக் காரணம் எமது மக்கள் தான் அவர்கள் இதில் நிதானமாகவும் பொறுமையாகவும் இருந்தால் இதனை உடனடியாக ஒரு முடிவுக்கு கொண்டுவரலாம்.

சில சீமெந்து வியாபாரிகள் வீடு கட்டுகின்ற எல்லோரையும் பணக்காரர்கள் என்று எண்ணுகின்றார்கள். எத்தனை ஏழைகள் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் சிறியளவிலான வீட்டைக் கட்டுகின்றார்கள் என்பதை உணர்ந்தால் இந்தப் பாவத்திலிருந்து பாதி வியாபாரிகள் திருந்தலாம்.

மற்றவர்களுக்கு உதவிய செய்ய வேண்டிய இந்தக் காலத்தில் ஒரு சீமெந்து பேக் 200 ரூபா 300 ரூபா என்று இலாபம் வைத்து விற்றால் இன்று வீடு கட்டுகின்ற நடுத்தர மற்றும் ஏழைகளின் நிலை என்ன?

980 ரூபாவுக்கு மொத்தமாக விற்கப்பட்ட சீமெந்து இன்று வினியோகஸ்த்தர்களால் 1050 ரூபாவுக்கு கொடுக்கப்படுகிறது.

எனது #Block_gal_Yard_Mullipothana கடைக்கு திருமலை விநியோகஸ்த்தர் insee Marine Agrnt Ramsan இது வரை பழைய விலைக்கே தருகிறார் இன்றுள்ள நிலையில் அவரது நடவடிக்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஆனாலும் நான் 100 பேக் சீமெந்து வேண்டிய நிலையில் 20 தான் கிடைத்தது தற்போது நான் எனது Yard வேலையை நிறுத்திவிட்டேன். இன்ஸா அல்லாஹ் நிலைமை சரியானதும் வேலையை தொடர்வேன்.

இப்படிக் குறைந்த விலைக்கு வாங்கிய உள்வியாபாரிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி என்னிடம் சீமெந்து இல்லை மிஸின் காரன் வைத்திருக்கிறான் இன்னாரிடம் இருக்கு நிப்போன் இல்லை மெரின் சங்ஸ்தா இருக்கு 1200 சொல்லுறாங்க அதை வாங்கித் தரவா என்று தங்களது சீமெந்தினை பிறரிடம் இருப்பதாக மக்களை ஏமாற்றி கள்ள வியாபாரத்தினை பொய்யும் ஹறாமும் கலந்து செய்கின்றார்கள்.

மக்கள் சரியாக இதற்கு எதிராக கேள்வி கேட்காமல் கிளர்ந்து எழும்பாமல் எப்படியோ சீமெந்தினை எவ்வளவு கொடுத்தாலும் வாங்கி தங்கள் வேலையை முடிக்கும் மனோபாவத்தில் இருப்பதால் இந்த சீமெந்து மாபியாவை ஒழிக்க முடியாது.

மக்களை ஒன்று பட்டு இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வாருங்கள்
Powered by Blogger.