திருகோணமலையில் சூறையாடப்படும் கடல் வளம் : சட்டவிரோத கடல் மணல் அகல்வு - பாதுகாக்க படுமா? திருமலையின் சுற்றுலா பிரதேசம்...
(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் சுற்றுலா மைய்யமான (RED ROCK) என்று அழைக்கப்படும் தேவி கல் பிரதேசத்திலுள்ள கடற்கரையில் கடல் வளங்கள் நாசமடைவதாகவும் சட்டவிரோதமாக பாரிய அளவு கடல் மணல் அகழ்வதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்
இலங்கையின் மிகவும் அழகான இடங்களாக இனங்காணப்பட்ட பத்து இடங்களில் ஒன்றான திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள RED ROCK என்றழைக்கப்படும் தேவிகள் பிரதேசமும் ஒன்றாகும்
RED Rock தேவி கல் என்றழைக்கப்படும் பிரதேசம் அழகிய செம்பாறைகளை கொண்ட கரையோரத்தில் அழகிய மணல் மேடால் காணப்படும் சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய இடமாகும்
அவ்வாறு காணப்படும் கடற்கரை பிரதேசத்தில் பாரிய அளவு கடல் மணல் சூறையாடப் படுவதாகவும் அப்பிரதேசத்தில் கடல் அரிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்
தேவி கல் பிரதேசத்தை அண்டிய கடற்கரை பிரதேசம் அரசாங்கத்தினால் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திதிற்கு ஒதுக்கப்பட்டுள்ள காணியின் எல்லைப்புறத்தில் மணல் அகலப்பட்டு வருகின்றது
இவ்வாறு அவலப்படும் கடல் மணலானது திருகோணமலை புல்மோட்டை கனியவள கூட்டுத்தாபனத்திற்கு கொண்டு செல்ல படுவதாகவும் அவ்வாறு அரசாங்க கூட்டுத்தாபனம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்படும் மணலானது தனியார் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டு சரியான முறையில் அகலப்படாமல் சட்டவிரோதமான முறையில் கடல் மணல் அகலப்படடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பாக பிரதேச வாசி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்...
தேவி கல் கடற்கரை பிரதேசமானது நிழல் தரக்கூடிய பெரிய மரங்களால் சூழப்பட்ட அழகிய கடற்கரை பிரதேசமாக இருந்ததாகவும் சுற்றுலாத் துறைக்கு மிகவும் முக்கியமான பிரதேசமாகவும் உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இப்பிரதேசத்தில் அதிக அளவில் வந்து செல்வதாகவும் தெரிவித்தார்மேலும் இக் கடற்கரை பிரதேசத்தில் முக்கிய அம்சமாக செந்நிற கற்பாறைகள் காணப்படுவதுடன் கடற்கரை மணல் கடலிலிருந்து சுமார் 500 மீட்டருக்கும் மேலான மணல் பிரதேசமாக இருந்ததாகவும் தெரிவித்தனர்
கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமி பேரலையின் போது இப்பிரதேசத்தில் கடல் நீர் கரையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கூட பாதிப்பு ஏட்படுத்தவில்லை எனவும் அதனால் இப்பிரதேசத்தில் சுனாமியினால் எவரும் பாரியளவில் உயிரிழக்கவில்லை எனவும் கரணம் இப்பிரதேசத்தில் காணப்பட்ட கடற்கரை மணல் மேடும் எனவும் பிரதேசவாசி ஒருவர் தெரிவித்தார்
இருப்பினும் தற்போது இந்த கடல் கரை பிரதேசத்தில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டு பாரியளவு கடல் மணல் அகழ்வதாகவும் மணல் அகழ்வினால் கரைப்பரப்பு கடலரிப்பினால் இல்லாமல் போயுள்ளதாகவும் இனிவரும் காலங்களில் அடை மழை பெய்தால் அல்லது கடலரிப்பு ஏற்பட்டாலோ மக்கள் குடியிருப்புக்குள் கடல் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் விசனம் தெரிவித்தனர்
மேலும் நாளொன்றுக்கு 25 தொடக்கம் 30 டிப்பர் வாகனங்களில் இவ்வாறு மணல் ஏற்றி செய்வதாகவும் விதிகள் பெரிதும் சேதமடைந்து காணப்படுவதாக தெரிவித்த்னர்
இது தொடர்பாக குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ முபாரக் அவர்களிடம் வினவியபோது இவ்வாறு கருத்து தெரிவித்தார்...

திருகோணமலை குச்சவெளி பிரதேச தேவி கல் பிரதேசமானது பாரியளவு சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய இடமாக காணப்படுவதாகவும் இவ்வாறு கடல் மணல் அகலப்படும் பிரதேசமானது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு சொந்தமான காணியின் எல்லைப்புறத்தில் புல்மோட்டை கனியவள கூட்டுத்தாபனத்தின் ஏட்பாட்டில் தனியார் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டு இவ் மணல் அகழ்வு பணி மேற்கொள்ளப்படுவதாகவும் இதுதொடர்பாக குச்சவெளி பிரதேச சபையிடம் எவ்வித அனுமதியும் பெறவில்லை எனவும்தெரிவித்தார்
மேலும் அப்பிரதேசத்தில் சட்ட விரோதமாக மணல் அகழ்வு செய்யப்படுவதாகவும்,அரசாங்க காணியினை தனியார் ஒருவர் உரிமம் கோரியது தொடர்பாகவும் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்திலும் திருகோணமலை மேல் நீதிமன்றத்திலும் குச்சவெளி பிரதேச சபையினால் வழக்கு தொடரப்பட்டு அவ்வழக்கு நிலுவையில் இருக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறு பாரிய அளவு கடல் மணல் அகலப்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தினார்
புல்மோட்டை கனியவள கூட்டுத்தாபனத்தினால் கடல் மணல் ஆளப்படுமானால் கடல் மட்டத்திலிருந்து 100 மீட்டருக்கு அப்பால் மாத்திரமே மணல் அகப்பட வேண்டுமெனவும் அதனை மீறி குச்சவெளி தேவி கல் பிரதேசத்தில் கடல் மட்டத்திலிருந்து 6 அடி மட்டுமே மீதம் வைத்து சுமார் 10 அடி ஆழம் வரை இவ்வாறு மணல் அகலப்படுவதாகவும் இதனால் அப்பிரதேசம் பாலைவனம் போல் மணல் மேடுகளாக காணப்படுவதாகவும் அப்பிரதேச மக்களினால் தமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றதாகவும் குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.முபாரக் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் குச்சவெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் சந்தர்ப்பத்தில் பிரதேசத்தில் இவ்வாறு மண வாழ்வில் ஈடுபடுவது தம்மால் அனுமதிக்க முடியாது எனவும் உரிய அதிகாரிகள் இதனை உடன் நிறுத்தி இப்பிரசித்தி பெற்ற சுற்றுலா பிரதேசத்தினை பாதுகாத்து தருமாறும் இதன்போது சுட்டிக்காட்டினார்.







