திருகோணமலையில் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு : பொலிசார் விசேட சோதனை..

(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்
திருகோணமலையில் அரச மற்றும் தனியார் வங்கிகள் அரச நிறுவனங்கள் வழமைபோல் இயங்குவதுடன் நகரில் அனேகமான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு இருப்பதை எம்மால் அவதானிக்க முடிந்ததுடன் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதை எம்மால் காணக்கூடியதாக இருந்தது
இவ்வாறு பொதுமக்களின் தேவையற்ற நடமாட்டத்தை கட்டுப்படுத்த திருகோணமலை தலைமையக பொலிஸார் மற்றும் உப்புவெளி பொலிஸார் இணைந்து வீதியில் விசேட சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தனர்
இவ் சோதனை நடவடிக்கையில் அனுமதிப் பத்திரங்களுடன் பயணிக்கும் பயணிகள் மற்றும் வாகனங்களுக்கு அனுமதிக்கப்பட்டதுடன் அத்தியாவசிய தேவை மற்றும் வைத்தியசாலை செல்லும் பயணிகளுக்கு மாத்திரம் பயணிக்க அனுமதியளிக்கப்பட்டதுடன் தேவையற்ற விதத்தில் பயணித்தவர்கள் எச்சரிக்கையுடன் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

