அத்தியாவசிய சேவைகள் என்ற போர்வையில் உர மூடைகளை கடத்திய இருவர் கைது!

எம்பிலிப்பிட்டியில் இருந்து அம்பாறை - நிந்தவூருக்கு அத்தியாவசிய சேவைகள் என்ற பெயர் பலகையுடன் பாரவூர்தி ஒன்றில் கொண்டுசெல்லப்பட்ட 50 கிலோகிராம் நிறைகொண்ட 350 மூடை யூரிய உரம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று மாலை 5 மணியளவில் அம்பாறை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவை மூலம் அரிசியை கொண்டுசெல்வதாக பெயர்பலகையை காட்சிப்படுத்தி, குறித்த யூரிய உரத்தை கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கைதுசெய்யப்பட்டவர்கள், கைப்பற்றப்பட்ட யூரிய உரம் மற்றும் பாரவூர்தி என்பனவற்றுடன், சம்மாந்துறை காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.