Header Ads

Breaking News
recent

சுவர் இடிந்து விழுந்ததில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு...



சிலாபம் - பள்ளம காவல்துறை பிரிவுக்குட்பட்ட கட்டுபொத்த பிரதேசத்தில் வீடொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

நேற்று(22) இடம்பெற்ற இச்சம்பவத்தில், காயமடைந்த நிலையில் சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பள்ளம பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து பிரேத பரிசோதனைகளுக்காக, சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பள்ளம காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
Powered by Blogger.