Header Ads

Breaking News
recent

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலபு : மூவர் வாள்வெட்டுக்கு இலக்காகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதி...

(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
திருகோணமலை - நொச்சிக்குளம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் மூவர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (09) பிற்பகல் 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்கானவர்கள் திருகோணமலை சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா விஜயகுமார் (39வயது) அவரது மகனான விஜயகுமார் பிரதாப் (20வயது) மற்றும் நொச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த எஸ்.டக்ஸன் (36வயது) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது சாந்திபுரம் துர்க்கை அம்மன் ஆலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் இரு குழுக்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மாலை அப்பகுதிக்கு சென்ற குழுவினருக்கு மற்றைய குழுவினர் வாளால் வெட்டிய தாகவும் வாள்வெட்டில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

ஆனாலும் குறித்த வால் வெட்டுடன் தொடர்புடைய மூவரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் குறித்த நபரை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்த உள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

குறித்த வாள்வெட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.