Header Ads

Breaking News
recent

திருகோணமலை கண்டி பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில்...

(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை கண்டி பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இன்று (12) அதிகாலை 4 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது

பெலவத்தை பகுதியிலிருந்து திருகோணமலை இந்திய என்னை கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக வந்த எரிபொருள் பௌசர் வானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது

இவ்வாறு விபத்துக்குள்ளான பவுசர் வாகனத்தில் சாரதி உட்பட மேலும் இருவர் பயணித்துள்ளதாகவும் சாரதிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் சாரதியுடன் வருகை தந்த இருவரும் காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

மேலும் இவ்விபத்து தொடர்பில் தெரியவருவதாவது நேற்று இரவு பெலவத்தை பிரதேசத்திலிருந்து வருகை தந்ததாகவும் இன்று அதிகாலை நான்கு மணியளவில் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையினால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவந்துள்ளதாக சீன குடா போலிசார் தெரிவித்தனர்.







Powered by Blogger.