கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்துக்கும், நோர்வே மற்றும் நெதர்லாந்து உயரஸ்தானிகருக்குமிடையிலான சந்திப்பு...
(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்துக்கும், நோர்வே மற்றும் நெதர்லாந்து உயரஸ்தானிகருக்குமிடையிலான சந்திப்பு இன்று (13) திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் சேதனப் பசளையை ஊக்குவிக்கும் விடயத்தில் அனைத்து நாடுகளும் கிழக்கு மாகாணத்தை பார்த்துக் கொண்டிருப்பதாகவும், கிழக்கின் விவசாயத்தை ஊக்குவிக்கும் விடயத்தில் மிகவும் கரிசனையாக இருப்பதாகவும் நெதர்லாந்து உயரிஸ்தானிகர் குறிப்பிட்டதாக ஆளுநர் தெரிவித்தார்.
நெதர்லாந்து சிறிய நாடாக இருந்தாலும் சேதனை பசளை தயாரிக்கும் விடயத்தில் சர்வதேச மட்டத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் இதன்போது தெரிவித்தார்.
மேலும் இதன்போது நோர்வே உயர்ஸ்தானிகர் JORANLI ESKEDAL மற்றும் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பீ.வணிகசேகர ஆகியோர் இதன் போது கலந்து கொண்டனர்.