Header Ads

Breaking News
recent

சேதனப் பசளை இறக்குமதி : உள்ளூர் சேதனப் பசளை உற்பத்தியாளர்களுக்கு ஊக்குவிப்பு இல்லை...

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
நாட்டில் இரசாயன பசளை தடை செய்யப்பட்டதை அடுத்து நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் சேதனப் பசளை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது அதனடிப்படையில் திருகோணமலை நிலாவெளி கோபாலபுர பிரதேசத்தில் அரசாங்கத்தின் எவ்வித உதவியும் இன்றி சுற்றுசூழலில் கிடைக்கும் கழிவுப் பொருட்களை கொண்டு சேதனப் பசளை உற்பத்தி செய்து வருகின்றான் இமாம் தீன் சம்சத் பீபி

இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் சேதனப் பசளை தமது வீட்டு சூழலை அண்டிய பிரதேசங்களில் கிடைக்கும் கழிவு பொருட்களினால் இவ் சேதன பசலையினை உற்பத்தி செய்வதாக அவர் தெரிவித்தார்

குடும்பத்தாரின் எவ்வித உதவியும் இன்றி அரசாங்கத்தின் எவ்வித ஊக்குவிப்பும் இல்லாமல் இவ்வாறு சேதனப் பசளை உற்பத்தி செய்து வருவதாக தெரிவித்த இமாம் தீன் சம்சத் பீபி

தன்னைப் போன்று பல கிராமங்களில் பல சேதனப் பசளை உற்பத்தியாளர்கள் இருப்பதாகவும் அவர்களை இனங்கண்டு உரிய முறையில் சேதனப் பசளை உற்பத்தி செய்வதற்கு ஊக்குவிப்பு மேற்கொண்டால் வெளிநாடுகளிலிருந்து இவ்வாறு சேதன பசளைகளை இறக்குமதி செய்யத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்

தனக்கு இவ்வாறு சேதனப் பசளை உற்பத்தி செய்வதற்கு கழிவுப்பொருட்களை ஒன்று சேர்ப்பதற்கு ஒரு தள்ளுவண்டியில் கூட இல்லாமல் இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் சேதன பசளைகளை உரிய விதத்தில் பராமரிப்பதற்கு மற்றும் கலங்கிய படுத்துவதற்கு போதிய இடம் இல்லாமையினால் பெரும் கஷ்டத்தின் மாதம் ஒன்றுக்கு சுமார் 300 தொடக்கம் 500 கிலோகிராம் வரை தாம் சேதன பசளை உற்பத்தி செய்வதாகவும் இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் சேதனப் பசளை ஒரு கிலோ கிரேம் ரூபா 50க்கு மாத்திரமே தாம் விற்பனை செய்வதாகவும் தெரிவித்தார்

தமக்கு அரசாங்கமோ அல்லது தனியார் தொண்று நிறுவனங்களோ உரிய விதத்தில் சேதனப் பசளை உற்பத்திக்கு வளங்களை அமைத்து தருவார்களே ஆனால் தம்மால் நிலாவெளி பிரதேசத்திற்கு தேவையான சேலைகளை உற்பத்தி செய்ய முடியும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்

எனவே அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களினால் சேதனப் பசளை உற்பத்திக்காக பல ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் அவை சரியாக உரிய நபர்களிடம் கொண்டு சேர்க்கப்படுவது உரிய அதிகாரிகளின் பொறுப்பு எனவும் தம்மைப் போன்ற சேதனப் பசளை உற்பத்தியாளர்களை உடன் அணுகி சேதனப் பசளை உற்பத்தியை மென்மேலும் ஊக்குவிக்குமாரும் கேட்டுக்கொண்டுள்ளார்.









Powered by Blogger.