Header Ads

Breaking News
recent

மாடறுபுத் தடை முஸ்லிம்களை பாதிக்குமா? நடக்கப்போவது என்ன? ஓர் ஆய்வு...

(பேருவளை ஹில்மி)
நம் நாட்டில் காலத்திற்குக் காலம் தேர்தல்கள் வரும் போது வித்தியாசமான உத்திகள் கையாளபடுகின்றன.

அந்த வகையில் அண்மைக்காலமாக தேர்தல்கள் வரும் போதும், பெரும்பான்மை மக்களின் ஆதரவுகள் வீழ்ச்சியடையும் போதும், அரசாங்கம் விமர்சிக்கப்படும் போதும், அவற்றை சீர் செய்யும் ஒரு யுக்தியாகவே மாடறுப்புத்தடை கையாளப்படுகின்றது.

இந்த வகையில் நீண்ட காலமாக விமர்சனங்கள் வரும்போதும், மாடுறுப்பு விவகாரம் முனெடுக்ப்படுவதும், மீண்டும் கைவிடப்படுவதும், ஒரு ஜனநாயக தந்திரமாக மாறியுள்ளது. நாட்டின் முன்னேற்றத்தையும், நாட்டின் அபிவிருத்தியையும், மக்களிடம் காட்டி ஆதரவு பெற முடியாத நிலையில், சிறு பான்மைக்கு எதிரான நடவடிக்கைகளை கைக் கொண்டு, பெரும்பான்மையை திருப்திப்படுத்தும் முறை தற்போது ஒரு அரசியல் தந்திரமாக கைக் கொள்ளப்படுகிறது.

இந்த வகையில் மீ்ண்டும் மாடறுப்பு விவகாரம் கையில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது, முஸ்லிம் சமூகம் ஏதோ மாட்டை உண்டுதான் உயிர் வாழ்வது போலவும். மாட்டிறைச்சி இல்லையெனில் முஸ்லிம்கள் வாழ முடியாது, என்பது போன்ற ஒரு மாயையை உண்டு பண்ணி, இதன் மூலமாக சில விடயங்களையும் எதிர்ப்புகளையும் சமாளிக்க முற்படுவதை போன்ற ஒர போக்கை உணர முடிகின்றது.


உண்மையில் மாடறுப்புத் தடையால் நடக்கப் போவது என்ன ?
மாட்டிறைச்சிக் கடைகளை நடத்துவது 100% முஸ்லிம்கள். அதேவேளை இதை நடத்துவார்கள் மாடறுப்புத் தடையால் அவர்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்பட்ட மாட்டார்கள். காரணம் இந்த வியாபாரத்தில் ஈடடுபடுவேர் அனைவரும் வசதி படைத்தவர்களாகவும் உடனடியாக பிரதித் தொழில் ஒன்றுக்கு மாறக்கூடியவர்களாகவும் காணப்படுகின்றனர். 

எற்கனவே இதில் சிலர் வேறு பல தொழில் துறையில் ஈடுபடுபவர்களாகவும் காணப்படுகின்றனர். எனவே இது தொழில் தூறையில் எந்த விதத்திலும் முஸ்லிம்களை பாதிக்காது. அதேவேளை நுகர்வுத் துறையை எடுத்து நோக்கும் போது, இலங்கையின் மொத்த சனத் தொகையுடன் ஒப்பிடும்போது மொத்த சனத்தொகையில் சிறு வீதமானவர்களாக முஸ்லிம்கள் படுகின்றனர்.

ஆக வெட்டப்படும் மாடுகளை முஸ்லிம்கள் நுகர்வதை விட ஏனைய சமூகத்தினர் நுகர்வு அதிகமாகும் என்பதற்கு சனத்தொகை புள்ளி விபரம் போதுமானதாகும். மாட்டிறைச்சி கடைகளுக்குச் செல்லம்போது இதை நிரூபணமாக உணர்ந்து கொள்ள முடியும். மேலும் தற்கால புதிய தலை முறையையின் உணவு பாவனையை எடுத்து நோக்கும் போது, நவீன நோய்களின் பாதுகாப்புக்காக மாட்டிறைச்சி பாவனையை அதிலும் ஒரு பகுதியினர் தவிர்த்தே வருகின்றனர்.

மாறாக இன்று வெட்டப்படும் அத்தனை மாடுகளையும் முஸ்லிம்கள் உணவுக்காக எடுத்துக் கொள்கின்றனர் என்ற வகையிலான ஒரு மாயை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் உண்மை நிலவரம் அதுவல்ல.

மாடறுப்புத் தடை விவகாரம் முஸ்லிம்களில் ஒரு சிறு வகையான நேரடியான தாக்கத்தை படுத்துவது முஸ்லிம்களால் மேற்கொள்ளப்படும் உளுஹியா வணக்கத்திளாகும்.

இருந்தாலும் இவ் வணக்கத்தை பொருத்தவரை ஆடு ஒன்றை குர்பான் செய்வதின் மூலம் அந்த வணக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. இதை தவிர கூட்டாக குடும்பமாக சேர்ந்து வெளிநாடுகளில் உள்ள உறவினர்கள் மூலமாக, அல்லது வேறு வகையில் வெளிநாடுகளில்
நிறைவேற்றிக் கொள்வதன் மூலம் இவ் வணக்கத்தையும் முஸ்லிம்களுக்கு நிறைவேற்றிக்கொள்ள முடிகின்றது. ஆகவே இதுவும் முஸ்லிம்களே வெகுதூரம் பாதிப்பதாக இல்லை.

பாதிக்கப்படப் போவது யார் ?
மாடறுப்பு விவகாரமானது நடைமுறைப்படுத்தப்படும் மாயின் இதில் வெகுவாக பாதிக்கப்படப்போவது அரச வருமானமும் பண்ணை வளர்ப்பு விவசாயிகளுமாகும்.

இன்று நாட்டில் நகசபை மாநகர சபை பிரதேச சபை போன்றவற்றிற்கு மாட்டிறைச்சிக்கடைகளின் வாடகை வருமானம் அவ்வப் பகுதிகளின் நகராட்சிகளில் கூடுதலான பங்கை வைக்கின்றது. ஒரு இறைச்சிக் கடைக்கான விலை மனுக்கோரல், கடைகளின் வாடகை பெருமளவில் காணப்படுகின்றது. எனவே மாடறுப்புத் தடை சட்டம் அமுல்படுத்தப்படுமாயின் இதனால் அரசாங்கம் பாரிய ஒரு வருமானத்தை இழக்கும்.

மறுபுறம் இராணுவ முகாம்கள், நாட்டின் முக்கிய வருமானமான சுற்றுலாத்துறை போன்றவற்றிற்கான மாட்டிறைச்சி பாவனைக்கு மாட்டிறைச்சி இறக்குமதி செய்யவேண்டிய நிலைக்கு அரசாங்கம் கட்டாயப்படுத்தப்படும். இதன் போது கூடுதலான அந்நிய செலவாணியை இதற்காக ஒதுக்கவேண்டிய
நெருக்கடிக்கு அரசாங்கம் ஆளாகும்.

மேலும் பொதுவாக பண்ணை வளர்ப்பு தொழிலானது பின்தங்கிய பகுதிகளில் நடைபெற்று வருவதால் பண்ணை வளர்ப்பு விவசாயிகளுக்கு ஒரு ஏதுவான தொழிலாகவும், அவர்களுக்கு தெரிந்து தொழிலாகவும் காணப்படுகின்றது. மேலும்
பண்ணை வளர்ப்பு விவசாயிகள் பெரிதும் வறிய மக்களாக காணப்படுவதோடு, அவர்கள் வாழும் சூழலைப் பொருத்து மாற்று தொழிலுக்கு மாறக்கூடிய நிலையில் இல்லாததும் அவர்கள் வாழும் சூழல் அவ்வாறான தொழில் துறைகளுக்கு வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்படுகின்றன. இது அவர்களின் வாழ்கை வருமாணத்தில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

நாட்டின் பால் சேகரிப்புக்காக மாடுகள் தொடர்ந்தும் வளர்க்கப்பட்டாலும் ஒரு மாட்டை நிர்வாகித்ததற்கான செலவுகளில் பெரும்பகுதி இறுதியில் அந்த மாட்டை இறைச்சிக்காக வெட்டப்படுவதற்கு விற்கப் படுவதிலேயே பெற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே மாடறுப்பு தடை செய்யப்படுமாயின் பால் சேகரிப்புக்கான வருமானத்தில் மாத்திரம் அவ‌ர்களது செலவுக்கான வருமானத்தை ஈட்ட முடியாமல் போகும். அவ்வாறான நிலையில் பண்ணை வளர்ப்பு தொழில் வெற்றி அடையாது என்பதே உண்மை. எனவே இலங்கையின் பசும் பால் சேகரிப்பு தொழில் நூறு வீதம் வீழ்ச்சி அடையும்.

மேலும் பாலுக்காக வளர்க்கப்படும் மாடுகளை இலங்கையில் இறைச்சிக்காக வெட்டப்படாமல், ஏற்றுமதிக்கான வழிகள் ஏற்படுத்தப்பட்டாலும், இன்று அரிசிற்கான நெல் வியாபாரத்தில் ஏற்பட்டுள்ளது போன்ற ஒரு நிலமை, அரசுக்கு சார்பான ஒரு சில புள்ளிகளால் பசுவை ஏற்றுமதி மாபியா உருவாகும். இவ்வாறு உருவானால் பண்ணை விவசாயிகள் பாலுக்காக வளர்க்கப்படும் மாடுகளை இறுதியில் விற்கும் போது
ஏற்றுமதி மாபியாக்களே இதன் விலையில் செல்வாக்கு செலுத்துவார்கள். அதனால் விவசாயிகளுக்கு தாம் பட்ட கஷ்டங்களுக்கும் உழைப்புக்களுக்கும் உரிய வருமானம் கிடைக்காமல் போகும். அவ்வாறானால் இன்று விவசாயிகள் பாதையில் இறங்கி போராடுவது போல், பண்ணை விவசாயிகளும் பாதையில் இறங்கும் நிலை உருவாகும். எனவே விவசாயத்தில் அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மாட்டுப் பண்ணை வளர்ப்பு தொழிலில் உருவாகும்.


எனவே மாடறுப்புத்தடை வேறு விதமான நோக்கில் அமுல்படுத்தப் பட்டாலும், இதன் பாதிப்பு வேறுவிதத்தில் நாட்டை பாதிக்கும் என்பதே தூர நோக்கில் உள்ள உண்மையாகும். எனவே இது சம்பந்தமாக முஸ்லிம்கள் கவலைப்பட வேண்டியதுமில்லை.

மாடறுப்புத் தடை செய்யப்பட்டும் என அறிமுகப்படுத்தப் பட்டாலும்
முன்னைய நிலமைகள் போன்று பெரும்பான்மை மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படும் இதற்கான ஆரவாரம் கிடைப்பதாகவோ தெரியவில்லை.

எனவே மாடறுப்புத் தடையால் அரசிக்கு ஏற்படப்போகும் தலை வலியால் மாடறுபுத்தடை வெற்றி அளிக்குமா ?
Powered by Blogger.