Header Ads

Breaking News
recent

ஆபாசப் பேச்சுக்களைத் தடை செய்வதற்கு இணையாக தண்டனைச் சட்டக் கோவையை திருத்தம்...

அருகிவரும் ஆபத்துக் கொண்ட விசேட விலங்கினங்கள் மற்றும் தாவர இனங்கள் தொடர்பான சர்வதேச வியாபாரம் பற்றிய சாசனத்தை (CITES) இலங்கையில் வலுவாக்கல் மற்றும் முறைமைப்படுத்துவதற்காக வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்...

அருகிவரும் ஆபத்துக் கொண்ட விசேட விலங்கினங்கள் மற்றும் தாவர இனங்கள் தொடர்பான சர்வதேச வியாபாரம் பற்றிய சாசனத்தின் பங்காளி அரசாக இலங்கை 1979 ஆம் ஆண்டு மே மாதம் 04 ஆம் திகதி குறித்த சாசனத்தில் கையொப்பமிட்டுள்ளது. குறித்த சாசனத்தின் உறுப்புரைகளை உள்ளூரில் வலுவாக்குவதற்கு இயலுமான வகையில் 2009 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க விலங்கினங்கள் மற்றும் தாவர இனங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக 2016 செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட திருத்தப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்ட மூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் வனவிலங்குகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஆபாசப் பேச்சுக்களைத் தடை செய்வதற்கு இணையாக தண்டனைச் சட்டக் கோவையை திருத்தம் செய்தல்...

ஆபாசப் பேச்சுக்களைத் தடை செய்யும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக 2021 ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த புதிய சட்டம் அறிமுகப்படுத்துவதற்கு இணையாக தண்டனைச் சட்டக் கோவையின் 285, 286 மற்றும் 289(அ) உறுப்புரைகளை முடிவுறுத்துவதற்காக சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்ட மூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்ட மூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மோசடிகள் தடுப்புக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்தல்...
நொத்தாரிசுகள் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக 2021 யூலை மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த திருத்தங்களுக்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, அதற்கு இணையாக மோசடிகள் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாம் உறுப்புரையுடன் சேர்க்கப்பட்டுள்ள திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், 4 மற்றும் 7 ஆம் உறுப்புரைகளும் திருத்தப்படல் வேண்டுமென அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, மோசடித் தடுப்புக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கும், அதற்காக திருத்தப்பட்ட சட்டமூலத்தை தயாரிப்பதற்கு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மலைநாட்டு திருமணம் மற்றும் திருமண முறிவு சட்டத்தை திருத்தம் செய்தல்...
1997 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க திருமணப் பதிவு செய்தல் (திருத்தப்பட்ட சட்டம்) மூலம் திருமணப் பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் 22 ஆம் உறுப்புரை திருத்தப்பட்டுள்ளதுடன், அதற்கமைய, சிறுவயதுத் திருமணங்களுக்கு பெற்றோரின் விருப்பு ஒப்புதல் அவசியமெனக் குறித்துரைக்கப்பட்டுள்ளது. குணரத்னம் எதிர் பதிவாளர் நாயகம் வழக்குத் தீர்ப்புக்கமைய 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு இலங்கையில் சட்டபூர்வ திருமணத்தைப் பதிவு செய்வதற்கு இயலாது. அவ்வாறான திருமணத்திற்கு பெற்றாரின் விருப்பு ஒப்புதல் இருத்தல் சட்டத்தின் முன் செல்லுபடியற்றது. குறித்த வழக்குத் தீர்ப்புக்கமைய தகுதி வாய்ந்த அதிகாரம் படைத்தவர் ஒருவருடைய உடன்பாட்டுடன் சிறுவயதுக்காரர்களின் திருமணத்திற்கு அதிகாரம் வழங்கும் சட்டங்களுக்கு ஏற்புடைய உறுப்புரைகளை முடிவுறுத்த வேண்டியுள்ளது. அதற்கமைய, தற்போது முஸ்லிம் திருமண மற்றும் திருமண முறிவு சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு இணையாக மலைநாட்டு திருமணம் மற்றும் திருமண முறிவு சட்டத்திற்கு ஏற்புடைய இசைவுகளை நீக்குவதற்கும், அதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கும் சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Powered by Blogger.