திருகோணமலையில் அதிபர் ஆசிரியர்கள் இணைத்து ஆர்ப்பாட்டம்...
திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலையில் அதிபர் ஆசிரியர்கள் இணைத்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர் இவ் ஆர்ப்பாட்டம் கிழக்கு மாகாண இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தினர் ஏற்ப்பாடு செய்திருந்தனர்
இன்று (25) பிற்பகல் கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்கு முன்பாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது
இவ் ஆர்ப்பாட்டத்தில் கல்விக்காக 6வீத நிதியினை ஒதுக்கீடு செய்,கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தை கிழித்தெறி,ஆசிரியர் அதிபர் சம்பள பிரச்சினைக்கு உடனடியாக தீர்வினை வழங்கு,மற்றும் பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதிபடுத்து என பதாதைகளை ஏந்திய வண்ணம் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தார்
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் கிழக்கு மாகாண செயலாளர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்
இந்த சம்பள போராட்டம் கடந்த 24 வருடங்களாக எமக்கு அரசாங்கம் தராது பறிக்கப்பட்ட சம்பளத்தினை மீள கோரியும், மாணவர்களின் இலவச கல்வியை பாதுகாப்பதற்காகவேண்டியே இவ் தொழிற்சங்க போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றது
அந்தவகையில் இருவரையும் எமது கோரிக்கைகளை நிறைவேற்றாது அரசாங்கமானது காலதாமதித்து கொண்டு செல்வதாகவும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதினை கவனத்தில் கொண்டு இன்று 25ஆம் திகதி சகல ஆசிரியர்களையும் அதாவது ஒன்று தொடக்கம் 5 வரை ஆரம்ப பிரிவு ஆசிரியர்களை பாடசாலை செல்ல கோரியும் அவர்களின் கல்வியை மேலும் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதற்காக ஒன்றிணைந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுத்துச் செல்கின்ற வேளையில் சில தொழிற்சங்கங்கள் போராட்டம் முடிவடையவில்லை இன்னும் மறு அறிவித்தல் வரும் வரையும் தொடர்ந்து தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறும் அவர்கள் பாடசாலை செல்ல வேண்டாம் என கூறி ஆசிரியர்களையும் அதிபர்களையும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போது பெற்றோர்களை அவர்கள் சார்பாக திருப்பும் வகையில் எனவே நாங்கள் இந்த தொழிற்சாலை போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் கொண்டிருக்கின்றோம்
அரசாங்கத்துக்கு எதிரான தொழிற்சங்க போராட்டம் நிறைவடையவில்லை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொண்டு இனி வரும் காலங்களில் தமது கோரிக்கைகளை நிறைவேற்றும் படியும் கூறிக்கொண்டு தமது தொழிற்சங்க போராட்டம் இப்போது ஒரு அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இனி வரும் காலங்களில் இந்த தொழிற்சங்க போராட்டம் பாரிய அளவில் மேற்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்வதாகவும்
எனவே எமது கோரிக்கை நியாயமானது அரசாங்கம் உடனடியாக கோரிக்கைகளை நிறைவேறறி இப் போராட்டத்திற்கான தீர்வைப் பெற்றுத்தந்து மாணவர்களின் இலவச கல்வியை மாணவரின் கல்வியையும் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்பதாக லங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் கிழக்கு மாகாண செயலாளர் தெரிவித்தார்
மேலும் இவ் அமைதி ஆர்ப்பாட்டம் அதிபர் ஆசிரியர்களின் முழு பங்களிப்புடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்றிந்தமை குறிப்பிடத்தக்கது.