Header Ads

Breaking News
recent

திருமலையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு சிரமதான நிகழ்வு...

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ் 

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு சிரமதான நிகழ்வு ஒன்று ஏற்றப்பட்டு செய்யப்பட்டிருந்தது

இந்நிகழ்வு கடந்த சனிக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது

மாவட்டத்திலிருந்து டெங்கு ஒழிப்பினை முற்றாக ஒழிக்கும் நோக்குடன் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை தவிசாளர் ஆர்.ஏ.டீ.எஸ்.டீ.ரத்நாயக்க அவர்களின் தலைமையில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் இணைந்து இவ் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு சிரமதான நிகழ்வினை ஏற்ப்பாட்டு செய்திருந்தது

இந்நிகழ்வில் உப்புவெளி பிரதேசசபைக்குற்றப்பட்ட பிரதேசங்களில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் கண்காணிக்கப்பட்டதுடன் டெங்கு நோய் பரவும் விதம் தொடர்பிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் வழங்கப்பட்டது

இதன் பொது அப்பிரதேசத்தில் விசேட சிரமதான நிகழ்வும் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை, பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம், உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உறுப்பினர்கள் மற்றும் கிராம மட்ட குழுக்களும் இவ் டெங்கு ஒழிப்பு சிரமதான வேளை திட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





Powered by Blogger.