125வது வருட நிறைவு : திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி பழைய மாணவர்களினால் திறன் பலகைகள் (Smart Board) வழங்கிவைப்பு
திருகோணமலை சசிகுமார்
திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் 125-ஆவது நிறைவினை முன்னிட்டு மூன்று திறன் பலகைகள் (Smart Board) வழங்கிவைக்கப்பட்டது
நோற்று (24) புதன்கிழமை கல்லுரி வகுப்பறைகளில் ஓய்வுபெற்ற அதிபர் ஆசிரியர்களினால் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது
இவ் மூன்று திறன் பலகைகள் (Smart Board) கல்லூரியில் கல்வி கற்ற 1992ம் ஆண்டு சாதாரணதரமும் 1995ம் ஆண்டு உயர்தரமும் கற்ற பழைய மாணவர்களினால் ஒன்றிணைந்து 3 திறன் பலகைகளை (Smart Board) கல்லூரிக்கு வழங்கிவைக்கப்பட்டது
மாணவர்களின் தேவை கருதி பல்ஊடக அறை, விஞ்ஞான பிரிவு, இடைநிலை பிரிவு அறகளிலே இவ் திறன் பலகைகள் (Smart Board) பொருத்தப்பட்டது
மேலும் இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபர்களான சி.தண்டாயுதபாணி, மா.இராசரெத்தினம் மற்றும் இ.புவனேந்திரன் ஆகியோர் பல்லூடக அறையிலும், ஓய்வுபெற்ற
ஆசிரியர்களான த.சச்சிதானந்தராஜா, ந.விக்னேஸ்வரன் மற்றும் நா.ஜெகன்மோகன் ஆகியோர் விஞ்ஞான பிரிவிலும், ஓய்வுபெற்ற ஆசிரியைகளான திருமதி அ.கணேசலிங்கம், திருமதி பா.தர்மராஜா மற்றும்
திருமதி க.இராஜகோண் ஆகியோரினால் இடைநிலை பிரிவிலும் இவ் திறன் பலகைகள் (Smart Board) அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.