நேற்றைய தினம் கிண்ணியாவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் : முறைப்படும் பதிவு...
கிண்ணியாவுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு அறுபதாயிரம் ருபாய் பொறுமதியான அலைபேசி பறிக்கப்பட்டன, கிண்ணியாவில் சம்பவம்.
கிண்ணியாவுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு அறுபதாயிரம் ருபாய் பொறுமதியான அலைபேசி பறிக்கப்பட்டன, கிண்ணியாவில் சம்பவம்.
கிண்ணியாவில் நேற்று(23) நடந்த ஆர்ப்பாட்ட செய்தியை சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டதோடு,அதில் அப்துல் சலாம் யாசீம் என்பவரின் அறுபதாயிரம் ரூபாய் பெறுமதியான அலைபேசி காடையர்களால் பறிக்கப்பட்டுள்ளன.
இரண்டு ஊடகவியலாளர்களினால் சேகரிகப்பட்ட வீடியோக்கள் மற்றும் படங்களை ஆர்ப்பாட்டத்தின் போது அமைதி இன்மைக்கு எதிராக செயற்பட்ட காடையர் கும்பலினால் அனைத்தும் அழிக்கப்பட்டதோடு உயிர் தப்பி ஒடி சென்றது விசேட அம்சமாகும்.
இது குறித்து கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது .
கிண்ணியாவில் நேற்றைய தினம்(23) இளைஞர் குழு ஒன்றினை அரசியல் வாதிகள் இருவர் இயக்கியதோடு,கிண்ணியாவில் பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுவதற்கும் காரணமாக இருந்துள்ளார்கள்.
அமைதி இன்மைக்கு அரசியல் தலைவர்களே காரணமாக இருக்கலாம்.
அண்மைக்காலமாக செய்தி சேகரிக்கச் செல்கின்ற உடகவியலாளர்கள் தாக்கப்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.