Header Ads

Breaking News
recent

திருகோணமலை பட்டினமும் சுழலும் பிரதேச சபைக்குற்ப்பட்ட பிரதேசங்களில் திண்மக்கழிவு அகற்றும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு...

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ் 
திருகோணமலை பட்டினமும் சுழலும் பிரதேச சபைக்குற்ப்பட்ட பிரதேசங்களில் திண்மக்கழிவு அகற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டினுந்தது

இன்று (20) திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை கௌரவ உப தவிசாளர் ஏ.எல்.எம் நௌபர் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது

திண்மக் கழிவு அகற்றுதல் தொடர்பான பிரச்சனைகள் இருப்பதாக எழுத்து மூலமாகவும். தொலைபேசிகள் மூலமாகவும் நேரடியாகவும் பெதுமக்கள் பலர் தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைத்தற்கு அமைவாக குடாக்கரை பிரதேசத்தில் இவ்வேலைத்திட்டம் கௌரவ உப தவிசாளர் ஏ.எல்.எம் நௌபர் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது

அப்பிரதேசத்தில் வழமையாக கழிவு அகற்றும் டெக்டர் சொல்கின்ற வீதிகளில் கழிவுகளை அகற்றுதல் சம்பந்தமாகவும்,குப்பைகள் அகற்றுவதற்கு செல்லமுடியாத வீதிகளில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாகவும் நேரில் சென்று ஆராயப்பட்டதாவும் பிரச்சனைகள் இருக்கும் பகுதிக்கு விரைவாக தீர்வினைப் பெற்றுக் தருவதாகவும் உப தவிசாளர் கௌரவ ஏ.எல்.எம் நௌபர் அவர்கள் வாக்குறுதியளித்திருந்தார்

மேலும் பிரதேச சபையின் பிரதான சேவைகளில் ஒன்றான திண்மக் கழிவு அகற்றல் சேவைகளை சொய்யக்கூடிய தொழிலாளர்கள் நமது பிரதேசத்தினை அழகாக வைத்திருப்பதற்கு பாரிய பங்காற்றும் நமது பசுமை நண்பர்களுக்கும் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்த உப-தவிசாளர் ஏ.எல்.எம் நௌபர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





Powered by Blogger.