Header Ads

Breaking News
recent

லயன் குடியிருப்பிற்கு பதிலாக புதிய வீடு!


எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் தோட்ட லயன் குடியிருப்புக்களை அகற்றி தனி விடுகளை உருவாக்க 500 மில்லியன் ரூபாய் ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுவரும் 2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதேபோல் புதிய தொழிநுட்பத்துடன் கூடிய பெருந்தோட்டங்களை உருவாக்குவது எமது நோக்கமாகும். அரசுக்கு சுமையை ஏற்றாமல் ஏராளமானவர்கள் இத்துறைகளில் செயற்பட்டு வருகின்றனர். எனவே குறிப்பிட்ட அமைச்சுகளும் திணைக்களங்களும் அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பார்கள் என நிதி அமைச்சர் தெரிவித்தார்.
Powered by Blogger.