Header Ads

Breaking News
recent

வெட்டுக்காயங்களுக்குள்ளானவரின் குடும்பத்தினர் நீதி கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு...

திருகோணமலை நிருபர் 
வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கியது தொடர்பில் திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் குடும்பத்தினரால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது

நேற்று முன்தினம் (10) இவ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

திருகோணமலை ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட மஹிந்த புரம் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் திருகோணமலை மூதூர் பிரதேசத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான கருப்பையா மனோகர் (37வயது) என்பவர் வாள்வெட்டுக்கு இலக்காகி பொதுமக்களினால் சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மறுநாள் மூதூர் தள வைத்தியசாலைக்கு இடம் மாற்றப்பட்டார்

பின்னர் சம்பவம் தொடர்பில் ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலையத்தில் சந்தேகத்தின் பெயரில் நான்கு பெயர்களை முன் வைத்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் மூவரை கைது செய்து பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் முறைப்பாடு தொடர்பில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் தமக்கு முறையான நீதி வேண்டுமெனவும் கோரி வெட்டுக் காயங்களுக்கு உள்ளானவரின் குடும்பத்தினர் திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்

மேலும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை தமக்கு நியாயமான நீதியினை பெற்றுத்தருமாறு உறவினர்கள் கோரிக்கை விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.







Powered by Blogger.