Header Ads

Breaking News
recent

திருகோணமலை அரச வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை நகரில் உள்ள அரச வங்கி ஊழியர்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்

இன்று (05) ஒரு மணியளவில் திருகோணமலை பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது

இவ் ஆர்ப்பாட்டத்தில் அரச வங்கிகளின் கூட்டு உடன்படிக்கைகளில் உடனடியாக கைச்சாத்திடு, அத்தியாவசிய வங்கி சேவைக்கு கூட்டு உடன்படிக்கை தேவையா, என்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்

இதன்போது இலங்கை மக்கள் வங்கி ஊழியர் ஒருவர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இவ் போராட்டம் ஊழியர்களினால் அரசாங்கத்திற்கு ஒரு அறிவித்தல் ஆகும்

அரசாங்கம் சரியான முறையில் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அவ்வாறு அரசாங்கத்தினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட விட்டால் பாரியளவிலான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்

அதன் முதல் கட்டமாக ''போஸ்டர் நடவடிக்கை'' மேற்கொள்ளப் பட்டிருந்தது இரண்டாம் கட்டமாக ''பேட்ச்'' அணிந்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது மூன்றாம் கட்டமாக இன்றைய தினம் திருகோணமலை பிரதான வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் இப் போராட்டமானது எமது வாழ்வுரிமைக்கானது

நாளாந்தம் உழைக்கும் எமக்கு சம்பள உயர்வினை வழங்குவது தொடர்பில் இந்த அரசாங்கம் காலம் தாழ்த்துவது எமது வாழ்க்கையினை ஒரு நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது

எனவே தயவுசெய்து சம்பள உயர்வுக்கான ஒப்பந்தத்தினை உடன் கையொப்பமிட்டு எமது ஊழியர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்து மாறு இந்த அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் கேட்டுக்கொண்டிருந்தனர்

மேலும் ஆர்ப்பாட்டம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மதிய உணவு நேரத்தில் நடைபெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.






Powered by Blogger.