உதவி செய்த நபர் : மோட்டார் சைக்களில் தவறி விழுந்த பெண் பலத்த காயங்களுடன் திருமலை வைத்தியசாலையில் ....
திருகோணமலை -மஹதிவுல்வெவ பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த பெண்ணொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து இன்று (20) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த எச்.பீ.சந்ராவத்தி (52வயது) பெண்ணே காயமடந்துள்ளதாகவும் தெரியவருகின்றது
.சம்பவம் குறித்து தெரியவருவதாவது- குறித்த பெண் தனது கணவருடன் ரொட்டவெவ கிராமத்தில் வசித்து வருவதாகவும் அதேநரம்
அப்பெண்ணின் மகளின் மகன் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் சுகவீனமுற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த சிறுவனை பார்ப்பதற்காக பஸ்ஸக்கு காத்திருந்த நேரத்தில்வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த நபர் ஒருவர் இப்பெண்ணை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வந்ததாகவும் அதேநரம் குறித்த பெண் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
இருந்த போதிலும் குறித்த பெண்ணின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமை நேர வைத்திய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.