Header Ads

Breaking News
recent

உப்புவெளியி‌ல் வாகன விபத்து :ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி...

(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி-அபயபுர பிரதான வீதியில் வேனுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இவ்விபத்து இன்று (14) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

நிலாவெளியில் இருந்து மார்பிள் பீச் செல்வதற்காக கண்டி-அலவத்துக்கொட பிரதேசத்தில் இருந்து சுற்றுலா வந்த இளைஞர்கள் பயணித்துக்கொண்டிருந்த வேன் ஒன்றுடன் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் உப்புவெளி பொலிசார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் திருகோணமலை மூன்றாம் கட்டை ,புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரொருவரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Powered by Blogger.