Header Ads

Breaking News
recent

சிவில் சமூக வலுவான அரசியல் தளங்களை உருவாக்க ரிங்கோ வன் சிவில் சமூக அமைப்பு உதயம்...

(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ் )
சிவில் சமூக முன்னெடுப்புக்கள் தான் வலுவான அரசியல் தளங்களை உருவாக்கும் என ரிங்கோ வன் சிவில் சமூக கட்டமைப்பின் பிரதம செயற்பாட்டாளர் பிலிப் முருகையா தெரிவித்தார்.

திருகோணமலை-முருகாபுரி பகுதியிலுளள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற TRINCO ONE CIVIL ALLIANCE என்ற அமைப்பினை நேற்று (21) அங்குரார்ப்பணம் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் பல முக்கிய வளங்கள் காணப்பட்டும் அது சிறந்த முறையில் பாவிக்கப்படாமையினால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளை வழங்க அதிருப்தி அடைவதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள 17 அபிவிருத்தி இலக்குகளை மையமாகக் கொண்டு தமது சேவைகளை தொடரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட மக்களின் சமூக பொருளாதார எழுர்ச்சி, நீதி பொறிமுறைகள் கல்வி மற்றும் பண்பாட்டியல் மக்கள் வாழ்வாதாரம் போன்ற துறைகளில் அதிக கவனம் செலுத்தி தமது பணியை காத்திரமாக வழி நடத்த உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் 19 க்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்புக்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள்,
புத்திஜீவிகள், முயற்சியாளர்கள், பண்பாட்டியல் அமைப்புகள், அரசியலாளர்கள்,நிபுணர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.








Powered by Blogger.