Header Ads

Breaking News
recent

திருகோணமலை நகரில் போதை மற்றும் புகைத்தல் தொடர்பில் விழிப்புணர்வு செயற்ப்பாடு...

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
புகைப்பொருள் விற்பனையிலிருந்து விடுதலை பெரும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் திருகோணமலையில் யான் சிரிலாங்கா வலையமைப்பு,எடிக் சிரிலாங்கா அமைப்பின் அனுசரனையின் கீழ் புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை(NANA) இவ் விழிப்புணர்வு வேலைத்திட்டத்தினை முன்னெடுத்திருந்தது

நேற்று (20) திருகோணமலை பிரதான பேருந்து தரிப்பிடத்திட்க்கு முன்பாகவும் திருகோணமலை கடற்கரைக்கு முன்பாகவும் இவ் விழிப்புணர்வு செயற்ப்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது

இவ் விழிப்புணர்வு வேலைத்திட்டத்தில் சாராயக்கம்பனிகளின் தந்திரோபாயங்களுக்கு ஏமாறும் ஏமாளிகளை மூளை உள்ள எந்த பெண்தான் விரும்புவாள்?, அனைத்து மகளிர்களுக்கும் பியர் வயிறு அற்ற கணவனை பெற உரிமை உண்டு என்ற சுலோகங்களை இந்திய வண்ணம் அமைதியாக இளைஞ்சர்களினால் இவ் விழிப்புணர்வு செயற்றப்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது

இதன்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டதுடன் இவ் விழிப்புணர்வு செயற்ப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்ட விடயம் நாட்டை நாளுக்கு நாள் பொருளாதார ரீதியாக பித்தள்ளி நாளாந்தம் ஏறத்தாள 55 பேர் என வருடத்திட்ற்கு ஏறத்தாள 20,000 பேரை மரணிக்கச்செய்யும் இலங்கை என்ற பெயரைக் கொண்டிருக்கும் பிரித்தானிய அமெரிக்க புகையிலை நிறுவனமானது அவ்வாறு மரணிப்பவர்களை விட அதிகமானவர்களை நோய்களுக்கு உற்படுத்தி அப்பாவி சிறுவர்களின் பெற்றோர்களை இழக்கச்செய்வது மட்டுமன்றி அதிகமான மனைவிமார்களுக்கு கணவர்களையும் இழக்கச்செய்கின்றனர் எனவும்

அகால மரணமடைபவர்களுக்கு பதிலாக புதிய பாவனையாளர்களை பலக்குவதை தவிற்பதற்கும் தாற்போது பாவனையில் ஈடுபடுவோர்களை குறைப்பதற்கும் உங்களுடைய கடைகளில் சிகரட் விற்பனையை தவிர்த்து நுகர்வோருக்கு அன்பு செலுத்தும் கடைகளாக செயற்ப்படுவீர்கள் என எமது எதிர்பார்ப்பு என அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டது

மேலும் இவ் விழிப்புணர்வு வேலைத்திட்டத்தில் யூத் அக்சன் நெட்வொர்க் தேசிய இயக்குநர் குழு ஒருங்கிணைப்பாளர் ஆர்.எப்.எம்.நௌபீர் யூத் அக்சன் நெட்வொர்க்
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம்.இஹ்சான் மற்றும் திருகோணமலை மாவட்ட யான் சிரிலாங்கா தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










Powered by Blogger.