பெண்களுக்கு எதிரான மற்றும் குடும்ப வன்முறை தொடர்பில் பயிற்சிப்பட்டறை...
பெண்களுக்கு எதிரான மற்றும் குடும்ப வன்முறை தொடர்பில் திறன் விருத்திப் பயிற்சிப்பட்டறை ஒன்று திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையில் இடம்பெற்றது
நேற்று (27) திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை கௌரவ உப தவிசாளர் முகம்மட் நௌபர் அவர்களின் தலைமையில் வளவாளராக சட்டத்தரணி ஏ.எச்.சியாமியா அவர்களினால்
சபையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது
இவ் பயிற்சிப்பட்டறை கிராமிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் (RECDO) மூலம் பெண்களுக்கு எதிரான மற்றும் குடும்ப வன்முறைகள் தொடர்பில் தெளிவூட்டப்பட்டது
இன் நிகழ்வில் பட்டினமும் சூழலும் பிரதேச சபை கௌரவ உப தவிசாளர் முகம்மட் நௌபர் அவர்களினால் ரெக்டோ நிறுவனம் திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் நலனுக்கான பல வேலைத்திட்டங்களை பல வருட காலமாக செய்து வருகின்றனர். அவர்களின் சேவைகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
மேலும் இன் நிகழ்வினை பிரதேச சபைக்கு வழங்கிய ரெக்டோ நிறுவனத்தின் பணிப்பாளர் மதிப்பிற்குரிய அசார் ஆசிரியர் அவர்களுக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டதுடன்.
பெண்களுக்கு எதிரான மற்றும் குடும்ப வன்முறை பற்றிய திறன் விருத்தி சம்பந்தமான பயிற்சி பட்டறை உள்ளுராட்சி மன்றங்களிலும் சிறந்த வளவாளர்களின் மூலம் ரெக்டோ நிறுவனத்தினால் செயற்படுத்தும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் பட்டினமும் சூழலும் பிரதேச சபை கௌரவ உப தவிசாளர் முகம்மட் நௌபர் தெரிவித்தார்.
இன் நிகழ்வில் பட்டினமும் சூழலும் பிரதேச சபை கௌரவ உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், மூதுர் பிரதேச சபை கௌரவ உறுப்பினரும் ரெக்டோ நிறுவனத்தின் திட்ட முகாமையாளருமான ஏ.ஏ.எஸ்.தானிஸ், ரெக்டோ நிறுவனத்தின் செயளாலர் எம்.எஸ்.எம்.இர்பான் மற்றும் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள்கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.