Header Ads

Breaking News
recent

திருகோணமலையில் கிராம அனர்த்தம் தொடர்பில் இடம் பெற்ற செயலமர்வு...

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலையில் கிராம அனர்த்த குழுவினர்களுக்கான அனர்த்தம் தொடர்பிலான செயலமர்வொன்று இடம் பெற்றது

இன்று (26) திருகோணமலை ஜேக்கப் விடுதியில் இவ் செயலமர்வு இடம் பெற்றது.

ஜனதாக்சன் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட இச் செயலமர்வானது திருகோணமலை மட்கோவ் கிராம அனர்த்த குழுவினர்களுக்கு இடம் பெற்றது.

இதில் அனர்த்தம் தொடர்பில் எவ்வாறு ஆராய்வது, முன் ஏற்பாடு, அணர்தத்தின் பின்னர் திட்டமிடல் தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்பட்டது

இவ் செயலமர்வில் திருகோணமலை மக்கோவை பிரதேசத்தை சேர்ந்த சுமார் 20 க்கும் மேற்பட்ட கிராம. மக்கள் கலந்து கொண்டனர்.

வளவாளராக. ஜனதாக்சன் நிறுவனத்தின் மேனேகே விஜயசிங்க, ஜயந்த குனசேகர மாவட்ட இணைப்பாளர் சுரேந்திரன், அபிவிருத்தி உத்தியோத்தர் ப.லோஜினி, கிராம உத்தியோகத்தர் எ.ஜீ.எ.காஞ்சனா மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர் ராஜிகா ககிசாந்தி ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






Powered by Blogger.