Header Ads

Breaking News
recent

தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் விசேட வைத்திய முகாம்...

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை- தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டுவரும் Primary Care System Strengthening Project (PSSP) திட்டத்தின் ஒரு பகுதியாக பயனாளிகளுக்கான விசேட வைத்திய முகாம் (06) 8.30 மணியளவில் இடம்பெற்றது.

தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் த.ஜீவராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதி பணிப்பாளர் டாக்டர் வீ. பிரேமானந் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.

தம்பலகாமத்தினைப் பிறப்பிடமாகக் கொண்ட டாக்டர் M. பத்மன் ( Consultant Dermatologist, DGH Mullaithevu) டாக்டர் த.ஜெயகாந்த் ( Consultant Cardiologist, DGH Mullaithevu) அவரது மனைவி டாக்டர் ஜெ.பிரசாந்தி (Consultant Dermatologist, TH Jaffna) ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பயனாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்கினர்.

கிராமப்புறங்களில் வாழும் மக்கள் விசேட வைத்திய நிபுணர்களின் சேவையை பெற்றுக் கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொள்ளும் இக்காலத்தில் இவ்வாறான முன்னெடுப்புக்கள் இப்பிரதேச மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும் என்று பிரதி சுகாதார பணிப்பாளர் தனதுரையில் தெரிவித்தார். பயனாளிகள் சார்பில் வைத்திய நிபுணர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்ட அவர் இதுபோன்ற தொடர்சேவைகளை எதிர்காலத்திலும் முன்னெடுக்க தம்மாலான அனைத்து ஒத்தாசைகளையும் வழங்குவதாக உறுதியளித்தார்.





Powered by Blogger.