Header Ads

Breaking News
recent

திருகோணமலை மாவட்டத்தில் முதல் மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் பிராந்திய அலுவலகம் திறந்து வைப்பு...


(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
திருகோணமலை மாவட்டத்தில் முதன் முதலாக மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் பிராந்திய அலுவலகம் இன்று (04) தம்பலகாமத்தில் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

கரும்பு சோளம் மரமுந்திரிகை,மிளகு,கருவா, கராம்பு வெற்றிலை உள்ளிட்டு சிறு பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை அபிவிருத்தி மற்றும் அது சார்ந்த கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புரவினால் திறந்து வைக்கப்பட்டது.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ "சௌபாக்கிய தெக்ம" கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமான அனைத்து வகையான பயிர்களை உற்பத்தி செய்கின்ற வேலை திட்டத்திற்கு அமைய திருகோணமலை மாவட்டத்திலும் பெரிய பரப்பளவில்
முந்திரிகை பயிர் செய்யப்பட உள்ளதாகவும் மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மேலும் திருகோணமலை மாவட்டத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் மரமுந்திரிகை இத்திட்டத்தை ஊக்குவிக்கும் நோக்கில் அனைத்து இடங்களிலும் மரமுந்திரிகை கன்றுகளை வழங்க உள்ளதாகவும் மர முந்திரிகை கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சாரங்கா ரத்னாயக்க குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான  கபில நுவன் அத்துகோரள மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாண்டிகோரள, தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜே. ஸ்ரீபதி மற்றும் தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் சம்பிக்க பண்டார என பலரும் கலந்து கொண்டனர்.










Powered by Blogger.