Header Ads

Breaking News
recent

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் விசேட பூஜை : திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
மாண்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடைய 76 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

இன்று(18) திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வர ஆலயத்தில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் வழிகாட்டலில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

நாட்டுக்கும், மக்களுக்கும், மாண்புமிகு பிரதம மந்திரி உட்பட அனைவருக்கும் ஆசி வேண்டி நடைபெற்ற இப்பூஜை வழிபாடுகளில் மாவட்ட அரசாங்க அதிபர் , மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ்.குருகுலசூரிய, ஏனைய உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.




Powered by Blogger.