Header Ads

Breaking News
recent

திருமலை பாலத்தோப்பூரில் T-56 ரக துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது...



(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
மூதூர் பொலிஸ் பிரிவுக்குற்றப்பட்ட பலத்தோப்பூர் பிரதேசத்தில் T-56 ரக துப்பாக்கியுடன் சந்தேக நபாருருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

நேற்று (25) இரவு 11மணியளவில் இவ் சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

சூரியபுர விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அம்பாறை காரைதீவு பாலையடி வீதியைச்சேர்ந்த முன்னாள் சமுர்த்தி உத்தியோகத்தரான தர்மலிங்கம் ரவீந்திரன் (46வயது) எனவும் தெரியவந்துள்ளது

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 1998ஆம் ஆண்டு தொடக்கம் சமுர்த்தி உத்தியோகத்தராக பணியாற்றி வந்த நிலையில் 2008 ஆம் ஆண்டு சமுர்த்தி உத்தியோகத்தர் பதவியிலிருந்து விலகி வெளிநாடு சென்றுவந்தவர் எனவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பயங்கரவாத தடுப்புப்பிரிவினர்களிடம் ஒப்படைப்பட்டவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.