மூதூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்...
இதில் மொத்த உறுப்பினர்கள் 24 பேரில் 21 உறுப்பினர்கள் மாத்திரம் இன்றைய சபை அமர்வில் கலந்து கொண்டதோடு வாக்களிப்பிலும் பங்குபற்றியிருந்தனர். இதில் 20 உறுப்பினர் ஆதரவாகவும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர் ஏ.எல்.எம்.அஹ்ஸன் மாத்திரம் எதிராக வாக்களித்தார்.
அதனடிப்படையில் 20 மேலதிக வாக்குகளினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வசமுள்ள மூதூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் - 06, தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள்-05, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் 04, ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் -01, -01, சுயேச்சைக் குழு உறுப்பினர்கள் -02,ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு -01 ,அகில தமிழ் காங்கிரஸ் -01 ஆகிய உறுப்பினர்கள் ஆகியோர் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
வாக்கெடுப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் ஏ.எல்.எம்.அஹ்ஸன் மாத்திரம் தமக்கு பாரபட்சம் காட்டுப்படுவதாக தெரிவித்து எதிராக வாக்களித்திருந்தனர்.அத்தோடு தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஒருவரும், ஜக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவரும் இன்றைய சபை அமர்வுக்கு வருகை தரவில்லை.
தமிழர் விடுதலை கூட்டணியின் உறுப்பினர் திரு.ஹரீஸ்டன் சில மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்தமையால் அக்கட்சியிலிருந்து இன்னொருவர் இன்னும் நியமிக்கப்படாமையால் அக்கட்சி உறுப்பினரும் சபை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.