Header Ads

Breaking News
recent

திருமலை லெஜன்ட்ஸ் விளையாட்டுக்கழகத்தின் சீருடை அறிமுகம்...

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை லெஜன்ட்ஸ் விளையாட்டுக்கழகத்தின் சீருடை உத்தியோக பூர்வமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது

திருகோணமலையில் 40 வயதுக்கு மேற்பட்ட வீரர்களைக் கொண்ட லெஜன்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் உத்தியோகபூர்வ சீருடை இன்று (26) திருகோணமலை மாவட்ட ஊடக இல்லத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது

கழகத்தின் உத்தியோகபூர்வ சீருடை செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் அனுசரணையுடன் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட லெஜன்ட்ஸ் விளையாட்டுக்கழகத்தின் சீருடை

செலிங்கோ லைஃப் காப்புறுதி நிறுவனத்தின் பணிப்பாளர் ரங்கநாதன் அவர்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்ட செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் முகாமையாளர் அலெக்ஸ் அவர்களினால் லெஜன்ட் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் சக்தி பவன் அவர்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த லெஜன்ட் விளையாட்டுக் கழகத்தின் உருப்பினர்கள்.

மிக நீண்ட காலமாக திருகோணமலையில் துடுப்பாட்ட மைதானம் இன்மையால் குறித்த விளையாட்டுத்துறையானது பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதுடன் அண்மையில் நடைபெற்ற லங்கா பிரிமியர் லீக் விளையாட்டுப் போட்டிகளில் கூட திருகோணமலையின் வீரர்கள் பங்கேற்காததை இட்டு தாம் மிகுந்த வருத்தமடைவதாக தெரிவித்தனர்.

மேலும் திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தவரையில் கடினப்பந்து துடுப்பாட்ட போட்டிகளுக்கான பயிற்றுவிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் மட்டின் என்று சொல்லப்படும் மைதான விரிப்பின் மேலாக பயிற்சி செய்வதன் காரணமாக கொழும்பு உள்ளிட்ட தரமான மைதானங்களில் விளையாடுவதற்கு திருகோணமலை வீரர்கள் சிரமப்படுவதாகவும் அவர்கள் இதன்போது குறிப்பிட்டனர்.

மேலும் 40 வயதுக்கு மேற்பட்ட முன்னைய கழக விளையாட்டு வீரர்களைக்கொண்டு குறித்த களகமானது உருவக்கப்பட்டதாகவும் இதன் மூலமாக உடற்பயிற்சி, மற்றும் மன வலிமையை குறித்த வயதுக்கு மேற்பட்டவர்களுக்கிடையே விருத்தி செய்யும் நோக்குடன் குறித்த கழகமானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்த அவர்கள் அதன் மூலமாக இளைஞ்ஞர்களுக்கிடையே ஆளுமையை விருத்தி செய்யவும் இச்செயற்பாடானது வளிவகுக்கும் என தாம் நம்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.

எதிர்காலத்தில் வேறு மாவட்டங்களில் உள்ள 40 வயதுக்கு மேற்பட்ட வீரர்களுடைய களகங்களுடன் போட்டியிட தாம் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

குறித்த நிகழ்வில் கழகத்தின் தலைவர் சக்தி பவன், செயலாளர் அர்.ஜெரோம், அணியின் தலைவர் லக்ஸ்மன், அணியின் உபதலைவர் இளவழகன் மற்றும் செலிங்கோ லைஃ நிறுவனத்தின் திருகோணமலை மாவட்ட முகாமையாளர் அலெக்ஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.




Powered by Blogger.