திருகோணமலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு : விடுமுறை கால சுகாதார நடைமுறை கேள்விக்குறியா? - புத்திஜீவிகள் கேள்வி...
இலங்கையின் சுற்றுலா பிரதேசங்களில் ஒன்றான திருகோணமலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது
கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சி அடைந்து வந்துள்ள நிலையில் இம்மாதம் விடுமுறை காலங்களை கழிப்பதற்காக திருகோணமலைக்கு உள்ளூர் சுற்றுலா பயணிகள் வருகை தருவதை எம்மால் அவதானிக்க கூடியதாக இருந்தது
திருகோணமலையில் நகர் மற்றும் திருகோணமலை நகரை அண்டிய கோனேஸ்வரம் கோவில் பிரதேசம்,திருகோணமலை கடற்கரை பிரதேசம் மற்றும் நிலாவெளி கடற்கரை பிரதேசம் என பல பிரதேசங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றது
இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றானது மேலும் அதிகரித்து வருகின்ற நிலையில் இவ்வாறு சுற்றுலாப் பயணிகளின் வருகையானது எதிர்காலத்தில் நாட்டிற்கு பெரும் சவாலாக இருக்கும் எனவும் திருகோணமலை நகர் மற்றும் நகரை அண்டிய பிரதேசங்களில் சுற்றுலா விடுதிகள் பெரும்பாலானவை முன் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நகரில் உணவகங்கள் மற்றும் நகரை அண்டிய வர்த்தக நிலையங்களில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாகவும் நகரின் பெரும்பாலான வீதிகள் வாகன நெரிசல் ஏற்றப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சினால் விடுமுறை காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட சுகாதார நடைமுறைகள் சரியாக சுற்றுலா பிரதேசங்களில் நடைமுறை படுத்தப்பட்டு பின்பற்ற படுகின்றனவா என்பது கேள்விக்குறியாகவே இருப்பதாகவும் புத்திஜீவிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்
எனவே திருகோணமலை மாவட்டத்தில் நகரசபை,பிரதேச சபை,சுகாதார திணைக்களம்,பாதுகாப்பு படை மற்றும் உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று உச்சமடையாமலும் நாட்டில் புதிதாக அடையாளம் காணப்பட்ட ஓமிக்ரோன் தொற்றிலிருந்தும் எம் மாவட்டத்தை பாதுகாத்துக் கொள்ளுமாறும் புத்திஜீவிகள் வேண்டுகொள் விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.