Header Ads

Breaking News
recent

உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கியுள்ள சடலம்...



பாறுக் ஷிஹான்
உருக்குலைந்த நிலையில் மருதமுனை கடற்கரை பிரதேசத்தில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மருதமுனை பொலிஸ் பிரிவில் இன்று (8) காலை குறித்த சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கமைய இஸ்தலத்துக்கு வருகை தந்த பொலிஸார் சடலம் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், சடலம் மீட்கப்பட்ட மருதமுனை கடற்கரைப்பகுதிக்கு பொலிஸாரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இம்மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், குறித்த சடலத்தை அடையாளங்காண முடியாத நிலையில் உருக்குலைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலமாக நாடு பூராகவுமுள்ள கடற்கரைப்பகுதிகளில் உருக்குலைந்த நிலையில் சடலங்கள் கரையொதிங்கி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
Powered by Blogger.