போதைப்பொருள் மொத்த வியாபாரி ஒருவர் கைது...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்குடா பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் போதைப்பொருள் மொத்த வியாபாரி ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்
கொழும்பிலிருந்து போதைப்பொருளைக்கடத்தி வந்து கல்குடாப் பிரதேசத்தில் விற்பனை செய்து வந்த ஓட்டமாவடியைச்சேர்ந்த 40 வயதுடைய வியாபாரியொரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இன்று (24) மாலை 06 மணியளவில் பிறந்துரைச்சேனை-2ம், குறுக்கு வீதியில் வைத்து இவ் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய களுவாஞ்சிகுடி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டார்
இவரிடமிருந்து 30 கிராம் ஐஸ் போதைப்பொருளும் போதைப்பொருள் விற்பனைக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டதுடன், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 540,000 ரூபா என கைது செய்யப்பட்ட போதை வியாபாரியே தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
குறித்த போதைப்பொருள் வியாபாரியைக் கைது செய்வதற்காக மிக நீண்ட நாட்களாக இவரைப் பின்தொடர்ந்து வந்ததுடன், திட்டமிடல்களும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலேயே இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
மேலும் கைது செய்யப்ப்ட்ட சந்தேக நபரை மேலதிக விசாரணைக்காக வாழைச்சேனைப் பொலிஸாரிடம் ஒபடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.